ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதில் ஹமீதியா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஹமீதியா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி, முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, சையது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் அரபிக் கல்லூரி, தாசன் பி.வி. அப்துல் காதர் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலை தூய்மையாகப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகளை பொது இடங்களில் வீசாமல், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் முறையாகச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தூய்மைப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
ஹிந்து பாரத் சேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விதர்சன ஊர்வலம்