சேத்தூர்,செப்-19
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 இன் படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக்கழிவு என நான்கு வகைகளாக தரம் பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் குப்பை கழிவுகளை 4 வகைகளாக தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும். அப்படி வழங்காதவர்களின் வீடுகளில் இருந்து குப்பை சேகரம் செய்யப்பட மாட்டாது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி பேரூராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More Stories
19-09-2026
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி
ஹிந்து பாரத் சேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விதர்சன ஊர்வலம்