February 7, 2026

சூடுபிடித்த மதுரை வடக்கு தேர்தல் களம் – திமுக, அதிமுகவில் சலசலப்பு!

வடக்கு தொகுதி எம்எல்ஏ-வும் திமுக மாநகரச் செயலாளருமான தளபதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வடக்கு தொகுதி எம்எல்ஏ-வும் திமுக மாநகரச் செயலாளருமான தளபதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருட்களை வழங்கி தேர்தல்களத்தைப் பரபரப்பாக்கி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியே இன்னும் இறுதி செய்யப்பட வில்லை.

இந்நிலையில் திமுக, அதிமுக வில் மதுரை வடக்கு தொகுதியில் தாங்கள்தான் போட்டியிடுகிறோம் என்ற அதீத நம்பி்கையில் திமுக மாநகரச் செயலாளர் தளபதி எம்எல்ஏ-வும், அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணனும் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டனர்.

டாக்டர் சரவணன் தினமும் பூங்காக்களில் நடைப்பயிற்சி சென்று, அங்கு வருவோர், போவோரைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு வருகிறார்.

மேலும், தான் வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறுவதோடு, ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கி நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் தற்போதே ‘கவனிப்பு’களை தொடங்கிவிட்டார்.

இதனால், அதிருப்தியடைந்த, இந்தத் தொகுதியை கேட்கும் மற்ற அதிமுக நிர்வாகிகள், மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் ராஜூவிடம் முறையிட்டனர். அவர், கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் டாக்டர் சரவணனின் தேர்தல் பணிகளை நிறுத்த முடியவில்லை.

அதனால், தொகுதிக்குள் அவர் வேட்பாளர்போல் வருவதைப் பார்த்து இந்தத் தொகுதியைப் பெற காய் நகர்த்தும் அதிமுகவினர்கூட, `ஒன்றும் செய்ய முடியவில்லையே’ என்று அதிருப்தியில் உள்ளனர்.

<div class="paragraphs"><p>வடக்கு தொகுதியில் மக்களைச் சந்தித்து வரும் அதிமுக மருத்துவர் அணி  இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்.</p></div>

வடக்கு தொகுதியில் மக்களைச் சந்தித்து வரும் அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்.

அதுபோல், மாநகர திமுக செயலாளர் தளபதி எம்எல்ஏ, தான் இத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக கூறி தொகுதி மக்களுக்குச் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திமுக கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ‘கை’ சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் மாநகர திமுக செயலாளர் தளபதி ஆதரவாளர்கள், உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று சுவரொட்டிப் பிரச்சாரத்தில் இறங்கினர்.

தற்போது வரை வடக்கில் திமுக-காங்கிரஸ் இடையே முட்டல், மோதல் நடந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் மற்றவர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பாளர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடக்கு தொகுதி எம்எல்ஏ-வும் திமுக மாநகரச் செயலாளருமான தளபதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (வலது) வடக்கு தொகுதியில் மக்களைச் சந்தித்து வரும் அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்.

Spread the love