February 7, 2026

மிட்சுபிஷி நிறுவனம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி மதிப்பில் குளிர்சாதன உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்துவைத்தார்

மிட்சுபிஷி நிறுவனம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி மதிப்பில் குளிர்சாதன உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்துவைத்தார்

திருவள்ளூர்: ஜப்​பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலெக்ட்​ரிக் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான, மிட்சுபிஷி எலெக்ட்​ரிக் இந்​தியா நிறு​வனம் ரூ.2,091 கோடி முதலீட்​டில், 2,104 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் இந்த ஆலையை அமைத்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்ள மகேந்​திரா தொழிற்​பூங்​கா​வில் 2.10 லட்​சம் ச.மீ. பரப்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள இந்த ஆலையில் ஆண்​டுக்கு 3 லட்​சம் அறை குளிர்​சாதன இயந்​திரங்​கள் மற்​றும் 6.50 லட்​சம் காற்​றழுத்​தக் கருவி​கள் உற்​பத்தி செய்​ய​லாம்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி வாயி​லாக இந்த ஆலையைத் திறந்​து​வைத்​தார். இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தொழில் துறை அமைச்சர் டிஆர்​பி.​ராஜா பேசும்​போது, “உற்​பத்​தித் துறை​யில் நாட்​டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்​கிறது. தமிழகம் மட்​டுமே தான் 11.19 சதவீத வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது.

ஜப்​பான், ஜெர்​மனி உள்​ளிட்ட பல்​வேறு நாடு​கள் தமிழக மாணவர்​களை பணிக்கு அமர்த்​துகின்​றன. இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் மின் சாதனப் பொருட்​களில் 41 சதவீதம் தமிழகத்​தில்​தான் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது” என்​றார். நிகழ்​வில், அமைச்​சர் நாசர், தலை​மைச் செயலர்நா.​முரு​கானந்​தம், வழி​காட்டி நிறுவன இயக்​குநர் தா​ரேஸ் அகமது, தொழில் துறைச் செயலர் அருண்​ராய் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Spread the love