September 24, 2026

கரூர்  மாவட்டம்,

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததற்கு, கரூர் மாவட்ட த்தில் பயனடைய உள்ள 21,273 மாணவ/மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.09.2026)  பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர்  மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.முத்துக்குமரன் இ.ஆ.ப., அவர்கள் மாணவ/மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ/மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணவ/மாணவியர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.

    கரூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 1,078 அரசுப் பள்ளிகளில் பயிலும் 51,942 மாணவ/மாணவியர்கள் பயன்பெறுகின்றனர்.

மாணவ/மாணவியர்களுக்கு உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் நகர்புற பகுதிகளில் 4 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளி, தான்தோன்றிமலை பகுதியிலும், பள்ளபட்டி நகராட்சியில் பள்ளபட்டி நகராட்சி அலுவலக வளாகத்திலும், குளித்தலை நகராட்சி, குளித்தலை ஊராட்சி ஒன்றியம் – கடம்பர் கோவில் பகுதியிலும், மற்றும் புகழூர் நகராட்சி TNPL பேரூராட்சி பழைய அலுவலகம், வேலாயுதம்பாளையம் ஆகிய ஒருங்கினைந்த சமையல் கூடங்களில் சுகாதாராமான முறையில் சுடச்சுட உணவு தயாரிக்கப்பட்டுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தில் மாணவ/மாணவியர்களுக்கு திங்கட்கிழமை – வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை – சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை – வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை – ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்/பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                 இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம்.சத்யா,  மாநகராட்சி ஆணையர் திரு.எம்.பிரித்திவிராஜ் இ,ஆ.ப., திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திரு.சு.தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.ப.பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் திரு.அ. ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அக்பர் அலி,  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Spread the love