September 26, 2026

இளம் தலைமுறையின் சக்தியால் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: இளம் தலை​முறை​யின் சக்​தி​யால் வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தியா உரு​வாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி​யின் 25 ஆண்டு கால பொது சேவையை நினை​வு​கூரும் வகை​யில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் அக்​டோபர் 17-ம் தேதி வரை நாடு முழு​வதும் `சேவை உறு​தி​மொழி இயக்​கம்’ நடத்தப்​படு​கிறது. இதன்​படி ரத்​த​தான முகாம்​கள், மருத்​துவ முகாம்கள், தூய்​மைப் பணி​கள் உள்​ளிட்​டவை மேற்கொள்ளப்பட்டு வரு​கின்​றன.

மேலும் பிரதமர் நரேந்​திர மோடி​யின் சொந்த ஊரான குஜராத்​தின் வட்​நகரில் இருந்து உத்தர பிரதேசத்​தின் வாராணசிக்கு மோட்​டார் சைக்​கிளில் சிறப்பு யாத்​திரை நடை​பெறுகிறது. இந்த யாத்​திரை​யில் ஏராள​மானோர் பங்​கேற்று உள்​ளனர். அவர்​கள் நேற்று மத்​திய பிரதேசத்​தின் தேவாஸ் நகரை சென்​றடைந்​தனர். பிரதமர் நரேந்​திர மோடி அவர்​களு​டன் காணொலி வாயி​லாக பேசி​னார்.

அவர் கூறிய​தாவது: வட்​நகர் – வாராணசி யாத்​திரை மூலம் நாட்​டின் பன்​முகத்​தன்​மையை தெளி​வாக அறிந்து கொள்ள முடி​யும். பாஜக​வின் சார்​பில் பல்​வேறு யாத்​திரை, பேரணி​களில் நான் பங்​கேற்று இருக்​கிறேன். பயண அனுபவங்​கள் நமது வாழ்க்​கையை செதுக்​கு​வ​தில் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

எந்​தவொரு சூழலிலும் அரசி​யலை​விட நாட்​டின் நலனுக்கே முதலிடம் அளிக்க வேண்​டும். பல்​வேறு தேர்​தல்​கள் வரும், ஆட்​சிகள் மாறக்​கூடும். ஆனால் மக்​கள் சேவையை நாம் தொடர்ந்து முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். நமது நாட்டை கட்​டி​யெழுப்ப வேண்​டும்.

இளம் தலை​முறை​யின் எழுச்​சிமிகு சக்​தி​யால் வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்​தியா உரு​வாகும் என்று உறுதியாக நம்​பு​கிறேன். நமது நாட்​டின் வளர்ச்​சி​யில் இளைஞர்கள் மிக முக்​கிய பங்​காற்றி வரு​கின்​றனர். “மக்​களே கடவுள்” என்ற கொள்​கை​யில் நாம் உறு​தி​யாக இருக்​கிறோம். மக்களுக்கு சேவை செய்​வதற்கு முதலிடம் அளிக்க வேண்​டும்.

இதை கருத்​தில் கொண்டே ஏழை குடும்​பங்​களுக்​காக ரேஷனில் இலவச உணவு தானி​யங்​கள் வழங்​கப்​படு​கிறது. நாடு முழு​வதும் ஆயுஷ்​மான் மருத்​துவ காப்​பீடு திட்​டம் வெற்​றிகர​மாக செயல்படுத்​தப்​பட்டு வரு​கிறது. மத்​திய அரசு சார்​பில் ஏழைகள், பெண்​கள், நோயாளி​கள், பழங்​குடி மக்​களின் நலனுக்​காக பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

Spread the love