சென்னை: தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 158 சார்பதிவாளர்களை இடமாற்றம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிய திட்டங்களில் வீடு, மனைக்கான முதல் பத்திரப்பதிவு, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடி வருகையற்ற முறையில், ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் அலுவலகத்தில் இருந்து பதிவு செய்யும் முறையை கடந்த ஆக.15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தில் பல்வேறு புதிய நடைமுறைகளும் அவ்வப்போது இணைக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களை பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், நேரடி வருகையில்லா பத்திரப்பதிவில், கட்டணம் செலுத்தி பெறப்படும் வில்லங்க சான்றிதழ் அவசியம் என்று கூறப்பட்டது.
இந்த நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து பதிவுத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதுதொடர்பாக பதிவுத்துறை பல்வேறு ஆய்வுகளை நடத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய திட்டங்களில் வீடு, மனை ஆகியவற்றின் முதல் விற்பனைக்கான பத்திரங்கள், அடமான ஆவணம் போன்றவற்றை பதிவு செய்ய கட்டணமில்லாமல் இணையதளத்தில் பெறப்படும் வில்லங்க சான்றே போதுமானது. ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்களை, ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக தாக்கல் செய்தாலும் பதிவுக்கு ஏற்கப்படும்.
கடன் நிறைவு தொடர்பான ரசீது ஆவணங்களை பதிவுசெய்ய வில்லங்க சான்று பார்க்க அவசியமில்லை. நேரடி வருகையில்லா பத்திரப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
நேரடி வருகையில்லா பத்திரப்பதிவில் ஆவணதாரர் எங்கிருந்தும் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய முடியும் என்றுள்ள நிலையில், சிறப்பு பொது அதிகார ஆவணம் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சிரமமில்லாத இந்த வருகையில்லா பத்திரப்பதிவு முறையில் கடந்த 40 நாட்களில் 76 ஆயிரம் பத்திரங்கள் பதியப்பட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அக்.15-ம் தேதி முதல் 4 வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இணையவழியி்ல் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 158 சார்பதிவாளர்களை இடமாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டது, பதிவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு முதல்வர் வாழ்த்து
ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம்