October 14, 2026

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love