October 16, 2026

ஒட்டன்சத்திரத்தில்  இரட்டையர் இறகுப்பந்து போட்டி!

ஒட்டன்சத்திரம்:அக்.-15

உலக மனநல தினத்தை முன்னிட்டு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் கிளை மற்றும் இந்திய சிறப்பு பொது மருத்துவர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் கிளை சார்பில், ஒட்டன்சத்திரத்தில் இரட்டையர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய பொது மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர். ஏ.ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் பட்ஸ் கல்விக் குழுமத் தலைவர் பொன். கார்த்தி மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பழனி பகுதி மூத்த ஆலோசகர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன் வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சன் ஷட்டில் கிளப் செயலாளர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில், “விளையாட்டும் மன அமைதியும்” என்ற தலைப்பில் விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைப் பெறுவதிலும் விளையாட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

Spread the love