February 9, 2026

கால் டாக்ஸி டிரைவர் டூ இத்தாலி கிரிக்கெட் அணி: அசத்தும் இந்திய வம்சாவளி வீரர் ஜஸ்பிரீத்

கால் டாக்ஸி டிரைவர் டூ  இத்தாலி கிரிக்கெட் அணி: அசத்தும் இந்திய வம்சாவளி வீரர் ஜஸ்பிரீத்

சென்னை: இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் பங்கேற்கும் இத்​தாலி அணி​யில் இந்​திய வம்​சாவளி வீரரா ஜஸ்பிரீத் சிங் இடம்​பெற்​றுள்​ளார். இவர் பஞ்​சாபின் பக்வாரா பகு​தி​யைச் சேர்ந்​தவர்.

இவரது குடும்​பம் 22 ஆண்​டு​களுக்கு முன்பு இத்​தாலி​யின் பெர்​கமோ பகு​திக்கு இடம்​பெயர்ந்​தது. அப்​போது ஜஸ்​பிரீத் சிங்​குக்கு வயது 10 தான். சில காலம் பெர்​கமோ​விலுள்ள உள்​ளூர் கிரிக்​கெட் அகாட​மி​யில் சேர்ந்து ஜஸ்பிரீத் சிங் கிரிக்​கெட் பயிற்சி பெற்​றார்.

அதன் பின்​னர் இங்​கிலாந்​துக்​குச் சென்று கிரிக்​கெட் பயிற்​சி​யைத் தொடங்​கி​னார். அப்​போது அங்கு தங்குவதற்கான செல​வை​யும், கிரிக்​கெட் செல​வை​யும் சமாளிக்க உபேர் கால் டாக்ஸி டிரைவ​ராக பணியாற்றினார்.

இதுகுறித்து ஜஸ்​பிரீத் சிங் கூறும்​போது, “எனது தந்தை தீரத் சிங், தாய் ஜஸ்​வீர் கவுர் ஆகிய இரு​வரும் பக்வாராவில் உள்ள தொழிற்​சாலை​யில் பணி​யாற்​றினர். அப்​போது திடீரென வாய்ப்பு கிடைத்து இத்​தாலி சென்​றோம். முற்​றி​லும் புதிய நாடு, புதிய மொழி, புதிய கலாச்சாரம் என மிரட்சி​யாக இருந்​தது.

ஆனால் கிரிக்​கெட் விளை​யாடு​வ​தில் எனக்கு ஆர்​வம் இருந்​தது. இங்​கிலாந்து சென்று பயிற்சி மேற்​கொண்​டேன். அப்​போது​தான் உபேர் டாக்ஸி டிரைவ​ராக பணியாற்றினேன். மீண்​டும் இத்​தாலிக்​குத் திரும்பி இத்தாலி தேசிய அணி​யில் இடம்​பிடித்​தேன்.

தாய்​நாட்​டுக்கு வந்து உலகக் கோப்​பை​யில் விளையாடுவது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. இங்கு உலகத் தரத்​தில் கிரிக்கெட் வசதி​கள் உள்​ளன” என்​றார். மிதவேகப் பந்துவீச்சாளரான ஜஸ்​பிரீத் சிங், இத்​தாலி அணிக்​காக 2019-ல் அறிமுகமாகி விளை​யாடி வரு​கிறார்​.

Spread the love