
கவுசல்யா, ராஜேஷ், தீபிகா
பொன்னேரி: பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்துநாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜேஷுக்கும் (30), அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கவுசல்யா கடந்த 5-ம் தேதி வீட்டில் தரையில் சிந்தியிருந்த சமையல் எண்ணெயில் கால் வைத்த போது, வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக ராஜேஷ், கவுசல்யாவின் தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், கவுசல்யாவின் முகத்தில் நக கீறல்களும், உதடு, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், கவுசல்யாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து, கவுசல்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார், வழக்குப் பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்ததாவது: கவுசல்யாவின் கணவர் ராஜேஷுக்கும், அவரது சித்தி மகளான, சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம்.2-ம் ஆண்டு படித்த வந்த தீபிகா (21)வுக்கும், உறவை மீறிய காதல் இருந்துவந்துள்ளது. அந்த காதல், ராஜேஷின் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்ததால், அதனை தட்டிக் கேட்டுள்ளார் கவுசல்யா.
கொலை செய்ய திட்டம்: இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு லாட்ஜில் ராஜேஷும், தீபிகாவும் அறையெடுத்து, தங்கி கவுசல்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கவுசல்யாவின் முகத்தை தலையணையால் அமுக்கியும், அவரது தலையை சுவற்றில் மோதியும் கவுசல்யாவை கொலை செய்துள்ளார் ராஜேஷ். பிறகு, கவுசல்யா தரையில் சிந்திய சமையல் எண்ணெயில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

More Stories
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றதை முன்னிட்டுசிறப்பு அர்ச்சனை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்
த. வெ. க தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு, பழனி பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தவெக வினர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மண்ணரை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது வெற்றியை கொண்டாடும் மகளிர் அணியினர் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்…