October 20, 2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறுப் பேச்சு: திமுக பெண் கவுன்சிலருக்கு சம்மன்

சென்னை: தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சியின் 95-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சைக் கண்டித்து, தவெக நிர்வாகியான உதயகுமார் என்பவர் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, எஸ்பிளனேட் காவல் நிலைய போலீஸார் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனிடம் விசாரணை நடத்த சம்மனை வழங்கியுள்ளனர்.

Spread the love