வாராணசி: இந்திய விமானப் படையின் 94-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உ.ப.யின் வாராணசியில் நமோகாட் பகுதியில் ‘விங்ஸ் ஓவர் கங்கை’ என்ற சாகச நிகழ்ச்சிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றன.
இறுதி நாளான நேற்று நடைபெற்ற விமானப் படையின் முக்கியசாகசக் குழுவினரின் வான்வழி சாகசங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், சுகோய்-30 எம்கேஐ, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் மற்றும் எல்சிஎச் பிரசந்த் உள்ளிட்ட போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சாகசங்களை நிகழ்த்தின. மூன்று கிரண் விமானங்கள் ‘V’ வடிவத்தில் பறந்து தேசியக் கொடியின் வர்ணங்களில் கண்கவர் காட்சியை உருவாக்கின.
அதேநேரம் தேசியக் கொடியைத் தாங்கிய எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ஓம்கார் வடிவத்தில் பங்கேற்றன. சூர்ய கிரண் வான்வழி சாகசக் குழு துல்லியமான பறத்தல் மற்றும் ஒருங்கிணைந்த தந்திரங்களை வெளிப்படுத்தியது. அதேநேரம் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு தனது வான்வழி சாகசங்களால் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

More Stories
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தியை விடுவித்தது சுல்தான்பூர் நீதிமன்றம்
உ.பி.-யில் ராகுல் காந்தியுடன் சென்ற வாகனம் விபத்து – பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் காயம்
மீண்டும் தேர்தலில் வெற்றி: பிரேசில் அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து