டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருந்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுகு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதுவரை சுமார் 93% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி 53 இடங்களிலும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இவ்விரு கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக அரபுக் கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அதிகாரப்பூர்வ முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து நெதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அரபு கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் இஸ்ரேல் தேர்தலைத் திருடிவிட்டன. இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கைப்பற்ற வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. இது இஸ்ரேலை இஸ்லாமியமயமாக்குவதற்கும், வலதுசாரி ஆட்சியை கவிழ்ப்பதற்கும் வழிவகுத்து, அதன் மூலம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையை அனைத்துத் தளங்களிலும், குறிப்பாக ஈரானில், பின் வாங்கவும் தோற்கடிக்கவும் வைப்பதாகும்” என தெரிவித்தார்.

More Stories
‘ஆபரேஷன் அல்மாஸ்’ மூலம் பாக். ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டனர்: பலூச் விடுதலை முன்னணி தகவல்
ஃபிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய வீரதீர விருது
பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி