டில்லியில் நடைபெற்றுவரும், நாடாளுமன்ற கூட்டத்ததொடரில், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், நாமக்கல் திமுக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தியா முழுமைக்கும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) விளங்குகிறது. வேளாண் கடன், ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதில் நபார்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாட்டின் செல்வத்தின் அடித்தளமாக இருக்கும் ஊரக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் உண்மையான தாய்ப்பறவையாக நபார்டு விளங்கி வருகிறது. நபார்டு வங்கி, தற்போது செயல்பட்டு வரும் நிதி கட்டமைப்பு, அதன் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்ற அதன் மீதான வரி விதிப்புகள் தடையாக உள்ளது. நபார்டு மீது விதிக்கப்படும் வரிகள், ஊரக மக்களின் நலனுக்காக நேரடியாக செலவிடப்பட வேண்டிய வளங்களை குறைத்து வருகிறது. எனவே மத்திய அரச நபார்டு மீது விதிக்கப்பட்டுள்ள வருவமான வரிகளை உடனடியாக நீக்க வேண்டும்.
மேலும், நபார்டு நிர்வகித்து வரும் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான (ஆர்ஐடிஎப்) ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். ஊரக உட்கட்டமைப்பு, பாசன வசதிகள், சந்தை அணுகல் போன்றவற்றிற்கு ஆர்டிஎப் நிதி மிகவும் அவசியமானதாக உள்ளது.
தற்போதைய நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். எம்எஸ்எம்இ, ஹட்கோ, சிட்பி போன்ற அமைப்புகள் முக்கியமானவை என்றாலும், அவற்றுக்கான நிதியுதவி நபார்டின் வளங்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
நபார்டு தனது பணிகளை திறம்பட நிறைவேற்ற அதிகமான பட்ஜெட் ஆதரவு, நிர்வாக சுயாதீனம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மனித வளங்களில் முதலீடு அவசியம். நபார்டு வங்கியை வலுப்படுத்துவது நாட்டின் ஊரக பொருளாதாரத்தையே வலுப்படுத்துவதாகும்.
எனவே நபார்டு வங்கிங்கு வரிவிலக்கு வழங்கி, ஆர்டிஎப் நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி, ஊரக வளத்தை வளர்த்தெடுக்கும் சக்தியாக அதனை மாற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

More Stories
மத்திய அரசுக்கு எதிராக பிப்.12ல் கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழக மக்களுக்கு சிபிஎம் அழைப்பு
10.02.26