பழனி நவம்பர் 13
பழனி திரு ஆவினன் குடி முருகன் கோவிலில், நேற்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் தலைமையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கில், வெற்றி பெற வேண்டும் என்று, பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. அதன் பின்பு ராம ரவிக்குமார் கூறியதாவது. திருப்பரங்குன்றம் வழக்கு வெற்றிக்காக பக்தர்களும் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். கடந்த அரசு அகல் விளக்கில் தீபம் ஏற்றாததால் தான், தற்பொழுது அகல் விளக்கு என்ற பதிப்பக புத்தக பிரச்சனையால், அவமானப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் முத்தமிழன் முருகன் மாநாடு நடந்தது. ஆனால் அந்த மாநாட்டிற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது. தனியாரிடம் எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது. என்ற கணக்கை அப்போதைய தமிழக அரசு சொல்லவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு புகார் கொடுத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
14-11-2026
பொருளூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் கழிவு தணிக்கை!
14-11-2026