November 14, 2026

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் வெளியேறும் பகுதியில் பள்ளம் – பேருந்துகள் செல்ல இடையூறு; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

ஒட்டன்சத்திரம், நவ.-13

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில்  பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் அந்த வழியாகச் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு நிலவி வருகிறது.

மேலும், பள்ளத்தால் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love