November 14, 2026

நாடாளுமன்ற தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு தகவல் இல்லை: பிரியங்கா காந்தி விளக்கம்

கல்பெட்டா: இம்மாத இறுதி​யில் நாடாளு​மன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்​ட​மிட்டு இருப்​ப​தாகவும், இதில் தொகுதி மறு​வரையறை தொடர்​பான மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டு இருப்​ப​தாகவும் ஊடகங்​களில் செய்​தி​கள் வெளியாகி உள்ளன.

கேரளத்​தின் வயநாடு மக்​களவைத் தொகுதி​யில் முகாமிட்டிருக்கும் அந்த தொகுதி எம்பி பிரியங்கா காந்​தி​யிடம் சிறப்பு கூட்​டத் தொடர் குறித்து நிருபர்​கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்​போது அவர் கூறிய​தாவது: நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டம் தொடர்​பாக எதிர்க்​கட்​சிகளுக்கு எவ்​வித தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு எது​வும் தெரிய​வில்லை.

நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகளின் குரல் தொடர்ந்து ஒடுக்கப்படு​கிறது. நாங்​கள் அரசி​யலமைப்பு சட்​டத்தை பாதுகாக்க போராடி வரு​கிறோம். நாட்​டின் முக்​கிய அமைப்புகளை சீர்​குலைக்க பாஜக முயற்​சிக்​கிறது. இதைதடுக்க தீவிர​மாகப் போராடி வரு​கிறோம். இவ்​வாறு பிரியங்கா தெரிவித்துள்​ளார்.

Spread the love