November 19, 2026

திருப்பூர் மாவட்டம்

நவம்பர் 19உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் இ.ஆ.ப., அவர்கள்  திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகள் தங்குதடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதிசெய்திடும் உன்னத நோக்கத்துடன் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9..00 மணி முதல் பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ரா.ஆனந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி வாணிஈஸ்வரி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) திருமதி பத்மப்பிரியா, உதவி ஆணையர் (கலால்) பாலமுருகன், மாவட்ட சமூகநீதித்துறை அலுவலர் ரசதீஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி புனித அந்தோணியம்மாள், மண்டல மேலாளர் ( தமிழ்நாடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) மகாராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி பிரவீணா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் மற்றும் அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love