November 20, 2026

பழனியில் வ உ சி நினைவு நாள் கந்தவிலாஸ் செல்வகுமார் பங்கேற்பு

பழனி நவம்பர் 19

பழனியில் தமிழக வெள்ளாளர் பேரவையின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின்  90வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பேரவை அலுவலகத்தில் பேரவை கவுரவ தலைவர் கந்தவிலாஸ் அதிபர் என்.செல்வகுமார் தலைமை வகித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதில்  பேரவை நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், துரைசாமி, ராஜாமணி, செளந்தராஜன், அழகேசன், காசிராஜன், பழனிசாமி, வீராச்சாமி, மணி, சரவணன், சிவக்குமார், முன்னாள் சூப்பிரண்டு முருகேசன், பில்டிங் காண்டரக்டர் நேரு, அரிமா சுந்தரம்,  வணிகர் சங்க ராஜா முகம்மது உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

Spread the love