November 20, 2026

பழனி கொடைக்கானல் மலைப்பாதை கிடு கிடு பள்ளத்தில் வேன் பாய்ந்தது பழனியைச் சேர்ந்த பூ வியாபாரி உட்பட மூன்று பேர் பலி 16 பேர் படுகாயம்

 பழனி நவம்பர் 20

 பழனி கொடைக்கானல் மலைப்பாதையில் கிடுகிடு பள்ளத்தில் வேன் பாய்ந்தது. பழனியைச் சேர்ந்த பூ வியாபாரி உட்பட  மூன்று பேர் பலி. 16 பேர் படுகாயம். இது பற்றிய விபரம் வருமாறு 

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் மதினா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முஜீப்ரகுமான் வயது 55, நிஜாம்முதீன் வயது 65 பூ வியாபாரி, ஷேக் பரீத் வயது 27 இவர்கள் தங்களின் உறவினர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, ஒரு வேனில் கொடைக்கானல் சென்றனர். மொத்தம் 24 பேர் சென்றதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வேனில் பழனியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கொடைக்கானல் டு பழனி மலை பாதையில் சவரி காடு என்ற இடம் வரும் பொழுது , டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த 400 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த வேனில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபாய கூக்குரல் எழுப்பினர். அது கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் மற்றும் பழனியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சென்றனர். மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பழனி மதினா நகரைச் சேர்ந்த நிஜாம்தீன் வயது 60 பூ வியாபாரி, சேக் பரீத் வயது 27, அப்பாஸ் வயது 65 மூவரும் பலியானார்கள். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த முசிப் ரகுமான் மற்றும் அவரது உறவினர்கள் பாத்திமாவயது 23 அம்ஜித்கான்வயது 29 அசாருதீன் வயது 28 ஷகிலா வயது 45 யூசி வயது 13 சமீனா வயது 42 உடுமலையை சேர்ந்த சஜித்மீரான் வயது 25 ஆகியோர் உட்பட 16 பேர்களும் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் பழனி தொகுதி எம்எல்ஏ ரவி மனோகரன், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், திண்டுக்கல் போலீஸ் எஸ்பி, ஜெயக்குமார் மற்றும் பழனி ஆர்டிஓ பிரியங்கா, பழனி டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தாசில்தார் சஞ்சய் காந்தி ஆகியோர்  பழனி அரசு மருத்துவமனைக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களிடம் ஆறுதல் கூறினர். இந்த விபத்து பற்றி பழனி மற்றும் கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Spread the love