November 20, 2026

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா.

ஒட்டன்சத்திரம் நவ.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில்இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றும் அணிசேரா நாடுகளின் ஒப்பற்றதலைவராகவும் போற்றப்படும் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின்பிறந்தநாள் விழா நவ.19-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஐ.என்.டி.யு.சி. திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, ஐ.என்.டி.யு.சி. திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஒடவை ஆர். பிச்சைமுத்து தலைமை வகித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பி. கருப்புச்சாமி, ஒட்டன்சத்திரம் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி. சுரேஷ்குமார், ஒட்டன்சத்திரம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முகம்மது மீரான், ஒட்டன்சத்திரம் ஒன்றிய துணைத் தலைவர் நாச்சிமுத்து, காங்கிரஸ் நிர்வாகி கர்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஒடவை ஆர். பிச்சைமுத்து வரவேற்று, நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Spread the love