மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிறிய வைரத் தேரோட்டம் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. நேற்று இரவு சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று சுப்பிரமணிய சுவாமியும் தெய்வானையும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துக்குப் பிறகு தேரில் எழுந்தருளினர்.
16 கால் மண்டபத்திலிருந்து புறப்பட்ட தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாகச் சென்ற தேர், சன்னதி பகுதியைக் கடந்து மேல ரத வீதியில் வலம் வருகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. பாதுகாப்புப் பணியில் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” – முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்