சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே இன்று காலை கடைவீதிக்குச் சென்ற விவசாயி மகேஸ்வரன் (40) மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் வழக்கம்போல் கடைவீதிக்குச் சென்றபோது அங்கு பதுங்கியிருந்த கும்பல் அவரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க மகேஸ்வரன் ஓடிய நிலையில், கும்பல் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இது முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு பின்னணி உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கின்றனர். கொலையில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியதால், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் அப்பகுதியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காலை நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தால் இடையமேலூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

More Stories
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி டிஜிபியிடம் உதயநிதி ஸ்டாலின் மனு
அன்பில் மகேஸை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் நேரில் சம்மன்