September 21, 2026

ராமநாதபுரம் அரண்மனை முன்பு இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் தமிழ்நாடு அரசு இ-சேவை தமிழ்நாடு தரவு உள்ளிட்டாளர்கள் சங்கத்தினர் இன்று வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், முறையான ஊதிய சீட்டு வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இ-சேவை மற்றும் ஆதார் மையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அரண்மனை முன்பு திரண்டு கோஷங்கள் எழுப்பினர். குறைந்த ஊதியத்தில் அதிக பணிச்சுமையுடன் பணியாற்ற வேண்டிய நிலை நிலவுகிறது என்றும், சமூகப் பாதுகாப்பு மற்றும் பிற நலன்கள் கிடைக்க முறையான ஊதிய பதிவுகள் அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

Spread the love