
போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப் பிளவு சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த மையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகள், பெற்றோர் பங்கேற்றனர். உடன், அகில பாரத மகிளா சேவா சமாஜத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் துஷ்யந்த் பிரசாத், ராமச்சந்திரா கல்வி, மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம் உள்ளிட்டோர்.
சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதடு மற்றும் அண்ணப்பிளவு சார்ந்த சிகிக்சைக்கு ஒருங்கிணைந்த மையம் நேற்று திறக்கப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம் மற்றும் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர் ஆகியோர் முன்னிலையில், இந்த சிறப்பு மையத்தை அகில பாரத மகிளா சேவா சமாஜத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் துஷ்யந்த் பிரசாத் திறந்து வைத்தார்.
நிகழ்வில், மருத்துவர் துஷ்யந்த் பிரசாத் பேசுகையில், “இந்தியா முழுவதும் 28 மையங்களில் உதடு, அண்ணப்பிளவு சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்தகைய நிதி ஆதரவுடன் செயல்படும் முதல் சிகிச்சை மையம் இதுவாகும்” என்றார்.
ஸ்ரீராமச்சந்திரா உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சை ஒருங்கிணைந்த மையத்தின் இயக்குநர் மருத்துவர் நவீன் குமார் பேசுகையில் “கனடாவிலுள்ள தனியார் தொண்டு நிறுவனமான டிரான்ஸ்ஃபார்மிங் ஃபேசஸ், இந்தியாவிலுள்ள அகில பாரத மகிளா சேவா சமாஜம் இணைந்து வழங்கும் நிதி உதவியால், ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க முடிகிறது.
இந்த சிகிச்சை மையம், அனைத்து துறைகளின் நிபுணர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மையமாக விளங்கும். கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு, உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது மற்றும் கர்ப்ப காலத்தில் மது அருந்துதல் போன்றவை உதடு மற்றும் அண்ணப்பிளவு தோன்றுவதற்கு முக்கிய காரணமாகும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார். பல்மருத்துவக்கல்லூரி தலைவர் மருத்துவர் எச்.தமிழ்செல்வன் மற்றும் சிகிச்சை பெற்ற 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்க

More Stories
இராசிபுரம்:ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்த மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார். .
மதுரை, கோவை மெட்ரோ ரயில்! மத்திய அரசு நிராகரித்ததாக பேரவையில் அறிவிப்பு!
மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 229 கோடி ஒப்புதல்!