சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் உலக இரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம். ஒட்டன்சத்திரம் பிப்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளியில்உலக இரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை பேரிண்பராணி தலைமை வகித்தர்.ஆசிரியை சாந்திசத்தியஷீலா வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் (ஓய்வு) டேனியல் முன்னிலை வகித்தார். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரம் கிளைச்செயலாளர் டாக்டர்.ஆசைத்தம்பி கலந்து கொண்டு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் உத்தமன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை விளையாட்டுப்பிரிவு ஆசிரியர் ராஜ்குமார் செய்து இருந்தார்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது