கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில், ரஜினி மற்றும் கமல் இணையும் படம் குறித்த புரமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்த நிலையில், நேற்று இந்த படம் தொடர்பாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இணையதளங்களை அதிர வைத்தது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகிறது. இந்திய திரையுலகிலேயே பேசும் பொருளாக இந்த படம் தற்போது மாறி உள்ளது.

More Stories
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy
மதுரை பின்னணியில் ஜீவா நடிக்கும் படம்! | Jiiva | Lark Studios
சூரியின் `மண்டாடி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Soori | Mandaadi