February 24, 2026

இராசிபுரம்: பல மணி நேரமாக போதமலையில் பற்றி எரியும் காட்டுத்தீ : அரிய வகை மரங்களும் மூலிகை செடிகள் கருகும் அவலம்.

 சம்பவ இடத்தில் வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருந்தபோதிலும் ,காற்றின் வேகம் காரணமாக பணிகளில் தொய்வு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2977 அடி உயரம் கொண்ட  இந்த மலை பகுதியில் மேலூா், கீழூா், கெடமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், போதமலை வனத் துறைக்குச் சொந்தமான வனப்பகுதியில்  மாலை தீடீரென காட்டுத்தீ பற்றி மலமலவென பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது .

. இந்த தீயினால் மலைப்பகுதியில் இருந்த சருகுகள், செடி கொடிகள்,மூலிகை செடிகள், உயர்ந்த மரங்கள் பற்றி எரிந்து நாசமான நிலையில் தொடர்ந்து பல மணி நேரமாக காட்டு தீ கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழல் உருவாகி உள்ளது.

மலைப்பகுதியில் பரவிய தீ பல கி.மீ. தொலைவு மேல்நோக்கி பரவி வருவதால், மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்த தீயினால் சுமாா்10 ஹெக்டோ் அளவுக்கு செடிகள், தழைகள், சருகுகள்,பல வகை மரங்கள், மூலிகைகள் போன்றவை எரிந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

 மேலும் இந்த மலைப்பகுதியில் மான் காட்டுப்பன்றி மலை மாடுகள் அதிகம் உள்ளதால் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வரும் சூழல் உருவாகியுள்ள நிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

image.png
Spread the love