சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பச்சமலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாததால் குக்கிராம மலைவாழ் மக்கள் தீர்மானம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் பூமியின் தரைத் தளத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் உள்ள மேல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பச்சமலை சேலம் மற்றும் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை பகுதியில் சேலம் மாவட்டத்தில் பச்சமலை என்கிற ஒரு ஊராட்சியும் , திருச்சி மாவட்டத்தில் தென்புற நாடு, வன்னாடு, கோம்பை நாடு, ஆகிய நான்கு ஊராட்சிகளில் பெரியபக்களம், ஓடை காட்டு புதூர், பெரிய மங்களம், பெரிய நாகூர், மாயம்பாடி, டாப் செங்காட்டுப்பட்டி, புத்தூர், நஜீலிப்பட்டி, பூதக்கால், தோனூர், மனலோடை, மருதை , செம்புளிச்சாம்பட்டி, சின்ன எழுப்பூர், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மலை கிராமத்தில் விளையக்கூடிய மரவள்ளிக் கிழங்கு, காய்கறி உள்ளிட்ட விவசாய விலை பொருட்களை மலை பகுதியில் உள்ள 11 கொண்டை ஊசி வளைவு பகுதியாக சென்று வர வேண்டும். மேலும் பச்சமலையில் உள்ள ஆத்திநாடு, தென்புரநாடு, வண்ணாடு, கோம்பைநாடு ஆகிய நான்கு பஞ்சாயத்துகளையும் இணைத்து, பச்சமலையை ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்றும் பச்சமலையில் உள்ள ஆத்திநாடு, வண்ணாடு ஆகிய பஞ்சாயத்துகளுக்கு தலா ஒரு புதிய பேருந்து இயக்க வேண்டும் என்றும் வனப்பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும், செல்போன் டவர் அமைத்து தரக்கோரியும், சோபனபுரம் முதல் டாப்செங்காட்டுப்பட்டி கிராமம் மற்றும் பெருமாள்மலை அடிவாரம் முதல் மணலோடை கிராமம் வரை உள்ள ஒருவழி தார்சாலையை, இருவழி தார்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

More Stories
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்( டார்ன்காம்) மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு திறன் மையம் திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம்
கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு