பழனி பிப்ரவரி 26
பழனி கோவில்களில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி எடுத்தும், சிறப்பு யாகம் நடத்தியும், வழிபாடு செய்தனர்
பழனி அடிவாரம், புலிப்பாணி ஆசிரமத்தில், உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சேர்ந்த 25 பெண்கள் 25 ஆண்கள் என 50 பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி, வேட்டி சேலை அணிந்து, சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டனர். இதற்கு பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்து யாகத்தை நடத்தினார். இதில் சண்முகானந்தம் என்ற ஜம்பு சாமிகள், ஜப்பான் சிவ ஆதீனம் பால கும்ப குருமுனி சாமிகள், கோபால் பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யாகம் முடித்த பின்பு, பழனி திரு ஆவினன்குடிக்கு பால்குடம் எடுத்து சென்று பாலபிஷேகம் செய்தனர். அதன் பின்பு பழனியில் நேற்று நடைபெற்ற மாரியம்மன் திருத்தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் தீச்சட்டி எடுத்தனர். ஜப்பானிய பக்தர்கள் கூறும்பொழுது: தமிழ்நாட்டின் சித்தர்களின் வாழ்வியல் வழிபாட்டு முறைகளை, மீட்டெடுக்க வேண்டுமென்று, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து வருகிறோம். என்று கூறினார்கள். இதற்கான நிகழ்ச்சியில் இளைய பட்டம் செல்வநாதன், கௌதம் கார்த்திக், யோகேஷ், பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது