
புதுடெல்லி: காமன் காஸ் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காமன் காஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேர்தலின்போது கட்சிகள் பண பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகத்தை பாதிக்கிறது. தேர்தல் செலவின கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது வேட்பாளருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுநல மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

More Stories
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளோம்: பஹல்காம் நினைவு நாளில் ஒமர் அப்துல்லா அஞ்சலி
திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 13 பேர் உயிரிழப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 2% அகவிலைப்படி உயர்வு- அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!