September 22, 2026

இங்கிலாந்திடம் உதை வாங்கிய நியூசிலாந்து… அரைஇறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் என்ன செய்யணும்?

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோல்வியுற்று இருப்பதால், தற்போது அரைஇறுதிக்கான ரேஸில் அந்த அணிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாகிஸ்தான் தகுதி பெற, முதலில் பேட்டிங் ஆடி அந்த அணி 103 முதல் 150 ரன்கள் எடுத்தால், 63 ரன்கள் அல்லது அதற்கு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள், 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதிபெற்றன.

Spread the love