February 28, 2026

முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர்!

ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற ஜம்மு காஷ்மீர் அணி குறித்து…

News image

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி.- படம்: பிடிஐ

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

கர்நாடக அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் மிகச் சிறப்பாக விளையாடி ரஞ்சி கோப்பையை முதல்முறையாகக் கைப்பற்றியுள்ளது.

கர்நாடகத்தில் நடைபெற்ர இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீரின் சுபம் பண்டிர் 121, சாஹில் லோத்ரா 72, பராஸ் டோக்ரா, கன்னையா வதாவன் தலா 70 ரன்கள் எடுத்தார்கள். கர்நாடகம் சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

கர்நாடக அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 160 ரன்கள் எடுத்தார்.Advertise with us

ஜம்மு காஷ்மீர் அணியில் ஆகிப் நபி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இரண்டாம் இன்னிங்ஸில் இந்த அணி 113 ஓவர்களில் 342/4 ரன்கள் எடுத்து ஐந்தாம் நாள் முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இரண்டாம் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கம்ரான் இக்பால் 160, சாஹில் லோத்ரா 101 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

போட்டி சமனில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த ஜம்மு காஷ்மீர் அணி கோப்பை வென்றதாக அறிவிக்கப்பட்டது.Advertise with us

67 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

Spread the love