சோழவந்தான் மார்ச் 11
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ஒன்றிய ஐக்கிய விவசாய சங்கம் சார்பில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பிரச்சனையில் அமைதி நிலவ மத்திய அரசு தலையிட கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேல் துவக்கியுள்ள போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும்
உலக நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்த,
ஈரான் மதத் தலைவர் அயோத்துல்லா கோமேனி படுகொலை செய்யப்பட்டதை, இந்திய அரசு வன்மையாக கண்டிக்க கோரியும்
போரில் 165 பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாக கண்டிக்க கோரியும்
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டுமென்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கண்டித்து கண்டன உரையாக சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ,பகத்சிங்,
நிவேதா (தமிழ்நாடு பெண்கள் சங்கம்)
முத்துப்பாண்டி (காங்கிரஸ் நகர தலைவர்), தங்கராஜ் (தி.க) அண்ணாத்துரை
(மக்கள் சட்ட உரிமை இயக்கம்),
கந்தவேல், விவேக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானம் நிறைவுரையாற்றினர்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.