ஆண்டிபட்டி, மார்ச் 15, தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டியில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டிக்கும் வகையில், சமையல் கேஸ் சிலிண்டருக்கு தூக்கு கயிறு போட்டு, மரக்கட்டைகளால் தூக்கு மேடையிட்டு தூக்கிலிட்டு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியால் தமிழகத்தில் வணிக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பழைய முருகன் தியேட்டர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் டீக்கடை உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் இரண்டு மரக்கட்டைகளால் மேடை போல அமைத்து சமையல் கேஸ் சிலிண்டருக்கு தூக்கு கயிறு போட்டு தூக்கிலிட்டு தொங்கவிட்டு நூதன முறையில் கோஷம் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , மத்திய அரசை கண்டித்தும், அமெரிக்காவை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.தமிழகத்தில் ஹோட்டல் வணிக நிறுவனங்கள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்க பட்டிருப்பதாகவும் கோஷம் எழுப்பப்பட்டது

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.