தேனி மாவட்டத்தில் வாக்குசாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதி குறித்து ஆட்சியர் ரஞ்ஜித்சிங் ஆய்வு மேற்கொண்டார். தேனி, மார்ச் 15, தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் ஆய்வுகள் மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டக்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, மற்றும் குரங்கணி, முந்தல் ஆகிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையங்களில் குடிநீர்வசதி, கழிப்பறை வசதி மற்றும் வாகனம் நிறுத்துமிடம் சாய்தளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆய்சியர் ரஞ்ஜித்சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது போடிநாயக்கனூர் வட்டாச்சியர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தேனி மாவட்டத்தில்

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்