பழனி மார்ச் 17
பழனி முருகன் மலைக் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து சென்று வர மின் இழுவை ரயில்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மின் இழுவை ரயில், மேல் தளத்தில் மின் கசிவு காரணமாக மின் இழுவை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்பு கோயில் பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மின்கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்பு, நேற்று மாலை நாலு மணி முதல் மீண்டும் மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் மனமகிழ்ச்சியுடன் மின் இழுவை ரயில்களில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி சென்றனர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி