நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 6,84,480 ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர் .
நேற்று ரிக் உரிமையாளரிடம் 1லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் , இன்று ஒரே நேரத்தில் வெண்ணந்தூர் ,ஆயில்பட்டி, நாச்சிப்பட்டி பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொண்டு வந்த வியாபாரிகளிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெண்ணந்தூர் ஒன்றியம் வெள்ளை பிள்ளையார் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த மகேந்திரா பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது 2.30 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டது தெரிந்தது. இவர் சேலத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி சக்திவேல் என்பதும் மாடு வாங்குவதற்காக வந்ததாகவும் கூறிய நிலையில் உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது .
தொடர்ந்து நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்ப்பட்டி அருகே தேர்தல் பறக்கம்படையினர் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த முட்டை லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 3,87,980 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட புதுச்சத்திரம் பகுதி சேர்ந்த பழனிவேல் என்பவர் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர் .
தொடர்ந்து வெண்ணந்தூர் ஒன்றியம் நாச்சிப்பட்டி அருகே தேர்தல் பறக்கும் பாடையினர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 66,500 ரூபாய் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்டது தெரிந்தது. கொல்லிமலை சேர்ந்த சரவணன் என்பவர் பிளாஸ்டிக் பைப் வாங்குவதற்காக ஆட்டோவில் வந்ததாகவும் உரிய ஆவணங்களை எதுவும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று ஒரே நாளில் 6,84,480 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்