விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் நிர்வாகக் குழுக் கூட்டம் குறித்து…
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்– கோப்புப் படம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
ராமதாஸ் தலைமையிலான அணி யாருடன் கூட்டணி என்ற எதிா்பாா்ப்பு எழுந்த நிலையில், பேரவைத் தோ்தல், கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் ஶ்ரீ காந்தி, கெளரவத் தலைவர் கோ.க.மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆர். அருள் உள்ளிட்ட 20 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து நிலைப்பாடு, கட்சித் தொடர்பான நீதிமன்ற வழக்கு நிலவரம் போன்றவை குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

More Stories
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ