Pradeep john | தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவை பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் வெயில் காலம் தொடங்குவதற்கு முன்கூட்டியே வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இனி அக்னி நட்சத்திரம் தொடங்கினால் என்னாகுமோ என்ற அளவிற்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் திடீர் மாயமாக இயற்கை பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை தூவி குளிர்ச்சியடைய செய்து வருகிறது.
சென்னை வானிலை மையமும் தமிழகத்தின் பல இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஜெட் ஸ்ட்ரீமில் ஏற்படும் வளைவு, மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு மழையைக் கொண்டுவரும் என்று கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜெட் ஸ்ட்ரீம்கள் என்பவை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் வேகமாகப் பாயும் காற்றுகளாகும். அவை வலுவான அழுத்த வேறுபாடுகள் காரணமாக மிக அதிக வேகத்தில் நகரும் குறுகிய, வளைந்து நெளிந்து செல்லும் காற்று நீரோட்டங்கள் ஆகும். இந்தக் காற்றுகள் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கி.மீ உயரத்தில் (சுமார் 200 hPa மட்டத்தில்) ட்ரோபோஸ்பியரின் மேற்பகுதிக்கு அருகில் ஏற்படுகின்றன.

More Stories
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/
தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசினார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அச்சக உரிமையாளர்கள் வங்கிகள் கல்யாண மண்டபம், வட்டி தொழில் புரிவோர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற புகைப்படம் 17-3-2026