ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்தது பற்றி…
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் வியாழக்கிழமை இணைந்தார்.
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்த ரஞ்சனா, மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் இணைந்தார்.
கடந்த சில நாள்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த ரஞ்சன், திமுகவில் இணைந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Advertise with us
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா, “திராவிட இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்வதை பெருமையாக கருதுகிறேன். பெண்கள் பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

More Stories
தொகுதிப் பங்கீடு: திமுக – மநீம இடையே 2-ம் கட்ட பேச்சு!
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்!
234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி!