March 20, 2026

முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தால்..- ஆதவ் அர்ஜூனாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு!

நயவஞ்சகத்தோடு சுற்றி திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஆதவ் அர்ஜூனாவிற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடிக் கொடுத்துள்ளார்.

திமுக அரசுக்கு எதிராக தமிழக முழுவதும் தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய தவெக தேர்தல் மேலாண்மை தேர்தல் மேலாண்மை பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான தலைவராக ரஜினிகாந்த் இருந்தார். ஆனால் இது திமுக குடும்பம் பல மிரட்டல்களை விடுத்து ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது.

ஆனால், திமுக குடும்பத்தை நம்பி ரஜினிகாந்த் படம் எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆதார் அர்ஜுனா கூறியது உண்மைக்கு மாறானது. காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து நிச்சயம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்டு இருந்தார்.

  

Explore Index FundsHDFC Mutual Fundஇந்த நிலையில்,ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடிக் கொடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைவர் பதவியில் மாயம் மாயங்களோடு, அதிகாரம் கைக்கு கிடைப்பதற்கு முன்பே, அதிகார திமிர் தனத்தோடு, பணம் இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற மமதையோடு பெரியவர்கள் சிறியவர்கள் என்று பாராமல், தமிழனுடைய மரபு வந்தாரை வரவேற்கும் தமிழகம்.

தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆
விருந்தோம்பலில் சிறந்தது தமிழகம். மற்றவர்களை மதிக்கின்ற தமிழகம். மாற்றான் தோற்றத்திற்கும் மனம் உண்டு பேரறிஞர் அண்ணா வாழ்ந்த தமிழகம். இப்படி ஒரு தமிழகத்தில் சமீப கால அரசியலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, வேண்டுமானாலும் பேசலாம் என்று நாகரீகம் தவறி, நயவஞ்சகத்தோடு சுற்றி தெரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தகுந்த பதிலடியை திமுக கொடுக்கும். ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைகட்டி கொன்றும் நின்றவன் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு பேசுகின்றனர்.

நயவஞ்சகத்தோடு சுற்றி திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும். இருக்கையில் கூட அமர மாட்டேன் என்று, பின்னால் நின்று கொண்டிருந்தவர் தற்பொழுது எங்களுடைய இயக்கத்திற்கு அறிவு பரிசோதனை பற்றி பேசுகிறார். இது உண்மைதான் அவர்கள் அறிவு பரிசோதனை மேற்கொள்வதற்கான சரியான இடம் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தான். தமிழக அரசியல் களத்தில் 60 ஆண்டுகளாக, உன்னுடைய காலில் நகம் முளைத்தது முதல் இருந்து தமிழகத்தில், கால் தடம் பதித்திடாத இடமே கிடையாது என்று, மு க முத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட எங்கள் தலைவரை, இயக்கத்தை, இழிவு படுத்த நினைக்கிறவன். யாராக இருந்தாலும், எங்கள் தாயே தடுத்தாலும் அவனை விடமாட்டேன் என்கின்ற கொள்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவன் களத்தில் வீறு கொண்டு நிற்பான். முறையாக தேர்தலை சந்திக்கும் நபர் 70 ஆண்டுகால கட்சி நடத்தி, பவள விழா கண்ட பேரியக்கம் நிச்சயம் பால்வாடி இயக்கத்திற்கு நிச்சயம் தகுந்த பாடத்தை கற்பிக்கப்படும் என்று கூறினார்.

இனி வார்த்தைகள் எதிர்த்தரப்பில் இருந்து எப்படி வருகிறது அதே அளவிற்கு திருப்பி பன்மடங்கு அடைகின்ற வல்லமை திமுகவிற்கு உண்டு வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் நிரூபித்து காட்டுவோம் என்று கூறினார். வில்லிவாக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா வேட்பாளராக களமிறங்க உள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்ப்பில் வெற்றியழகன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Spread the love