March 22, 2026

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம்

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கப்பலும் சிக்கியது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வர வேண்டிய 24 ஆயில் டேங்கர் மற்றும் காஸ் டேங்கர் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கி யானுடன் பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இந்தியாவுக்கு சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் வழக்கமான பாதையில் வராமல் ஈரானின் லார்க் தீவைச் சுற்றி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இந்த வழியாக வந்தால் ஈரான் கடற்படை இந்திய கப்பலின் அடையாளத்தை நேரடியாக பார்த்து உறுதி செய்ய முடியும்.

இந்த பாதுகாப்பான வழித்தடத்தில் இந்தியாவின் 22 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரவுள்ளதாக கடல்சார் தரவு மற்றும் உளவு நிறுவனம் லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (எல்எல்ஐ) தெரிவித்துள்ளது. இது மத்திய

Spread the love