நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் மெசின்கள் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசியில் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கான வாக்குசாவடிகளில் பயன்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,613 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,241 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,360 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 10,214 இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கிடங்கில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டர் ரேண்டம் குலுக்கல் முறையில் இந்த மெசின்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ராசிபுரம் தொகுதிக்கு மொத்தம் 1,054 இயந்திரங்கள், சேந்தங்கலம் தொகுதிக்கு மொத்தம் மொத்தம் 1,123 இயந்திரங்கள், நாமக்கல் தொகுதிக்கு மொத்தம் 1,147 இயந்திரங்கள், பரமத்திவேலூர் தொகுதிக்கு மொத்தம் 990 இயந்திரங்கள். திருச்செங்கோடு தொகுதிக்கு மொத்தம் 1,066 இயந்திரங்கள், குமாரபாளயம் சட்டசபை தொகுதிக்கு மொத்தம் 1,197 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 1,780 வாக்குசாவடிகளில் முதற்கட்டமாக 5,340 எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள், 20 சதவீதம் தயார் நிலையில் 1,236 இயந்திரங்கள் என மொத்தம் 6,576 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
டிஆர்ஓக்கள் சரவணன், கண்ணன், மாவட்ட ஆட்சியரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சுஜாதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

More Stories
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புற நகர் மாவட்ட பொதுச்
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!