நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி மார்ச் 25
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நாளை மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் புகழ்பெற்றது பங்குனி உத்திரம் திருவிழாவாகும். இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் சிறு சிறு குடங்களில் நீரை சேகரித்து, பின்பு அதை தீர்த்த காவடியாக மேளதாளம் முழங்க, பழனிக்கு எடுத்து வருவார்கள். பின்பு தீர்த்தக் காவடி நீரை பழனி முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். நாளை மார்ச் 26 ஆம் தேதி வியாழக்கிழமை பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் 31 ஆம் தேதி முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை, பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

More Stories
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலர்கள், கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தைத் திணிக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்