புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா சுயேச்சை எம்.பி. அப்துல் ரஷீத் ஷேக். பொறியாளரான இவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் கைதாகி சிறையில் உள்ளார்.
இவர் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவியதாகப் புகார்கள் உள்ளன. சிறையிலிருந்தபடி மக்களவை தேர்தலில் வென்ற ரஷீத், நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
அதன்படி, நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று நேற்று அவர் பேசும்போது, “தவறான கொள்கைகளால் இறந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் சாதாரண குடிமக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
ஈரானுக்கு உதவுவதற்காக காஷ்மீர் மக்கள் திரட்டிய கோடிக்கணக்கான ரூபாயையும் பாராட்டுகிறேன். எனது ஒரு மாத எம்.பி.க்கான அரசு ஊதியத்தை 62 மாணவிகள் உயிரிழந்த ஈரானிய பள்ளிக்கு அனுப்ப உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

More Stories
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா – ஈரான் நேரடி மோதல்: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் 14 அம்ச திட்டத்தை பரிசீலிப்பதாக ஈரான் தகவல்