March 26, 2026

மார்ச் 28ந்தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி! MAR 26, 2026 சென்னை: 

சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் வாக்​குச்​சாவடி
அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடை​பெற உள்​ளது.
இதுகுறித்து மாவட்​டத் தேர்​தல் அலு​வலரும், சென்னை மாநக​ராட்சி ஆணை​யரு​மான
ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் ,  தமிழக சட்​டப்​பேரவை பொதுத்
தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16
சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 978 இடங்​களில் மொத்​தம் 4,079 வாக்​குச்​சாவடிகள்
உள்​ளன. வாக்​குச்​சாவடி மையங்​களில் பணிபுரிய உள்ள 19,594 வாக்​குச்​சாவடி
அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு 16 மையங்​களில் மார்ச் 28-ம் தேதி
காலை 9 மணிக்கு நடை​பெற உள்​ளது.
பெரம்​பூர் தொகு​திக்கு வியாசர்​பாடி​யில் உள்ள டாக்​டர் அம்​பேத்​கர் அரசு கலைக்
கல்​லூரி​யிலும், கொளத்​தூர் தொகு​திக்கு பந்​தர் கார்​டன் சென்னை உயர்​நிலைப்
பள்​ளி​யிலும், ராயபுரம் தொகு​திக்கு மேற்கு மாதா சர்ச் சாலை​யில் உள்ள புனித பீட்​டர்
உயர்​நிலைப் பள்​ளி​யிலும் பயிற்சி வகுப்பு நடை​பெறும்.

அனைத்து தொகு​தி​களின் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கும் பயிற்சி வகுப்​புக்​கான
ஆணை​கள் நேரடி​யாக​வும், குறுஞ்​செய்தி வாயி​லாக​வும் அனுப்​பப்​பட்டு வரு​கிறது.
இந்த பயிற்சி வகுப்​பில் அவர்​கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்​டும். இதில் கலந்து
கொள்​ளாத வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் மீது தேர்​தல் நடத்தை விதி​களின்​படி,
நடவடிக்கை எடுக்​கப்​படும்.
இவ்​வாறு  தெரி​வித்​துள்​ளார்

Spread the love