தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில், அனைத்து
கட்சிகளும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு குறித்த முடிவுகளை இறுதி
செய்திருக்கும் நிலையில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்க
உள்ளது.
இந்த நிலையில் சுவாரஸ்யமான விஷயம் கிரிப்டோ சந்தையில் நடத்து
வருகிறது. ஐபிஎல் போட்டியின் போது எப்படி எந்த அணி வெற்றி பெறும்
என பல்வேறு தளத்தில் பெட்டிங் செய்யப்பட்டு விளையாடப்படுகிறதோ,
இதேபோல் உலகளவில் இயங்கும் PolyMarket என்ற ஒரு தளத்தில்
அரசியல், போர், பொருளாதாரம், விளையாட்டு தொடர்பான விஷயங்கள்
மீது பந்தயம் கட்டும் விஷயம் நடந்து வருகிறது.
உதாரணமாக டிரம்ப் வெனிசுலா-வை தாக்கும் போதும் சரி, கிரீன்லாந்து
கைப்பற்றும் போதும் சரி, பெடரல் வங்கி வட்டி விகித குறைக்கும் போதும்
சரி பல்வேறு கேள்விக்கு ஊகம் அடிப்படையில் பத்தியம் கட்டப்பட்டது..
இவ்வளவு ஏன் சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மத்தியிலான
விளையாட்டுப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் கூட
தற்போது பெட்டிங் நடக்கிறது. இப்படி 2026 தமிழகச் சட்டமன்ற தேர்தலில்
எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து தற்போது பெட்டிங் மிகவும்
தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெறும் பெரும்பாலான
மக்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதில்
முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுவரையில் வெளியான
கணிப்புகளை ஒப்பிடும் போது பாலிமார்கெட் தளத்தில் நடக்கும்
பெட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
பாலிமார்க்கெட் என்பது உலகின் மிகப் பிரபலமான டிஜிட்டல் ப்ரெடிக்ஷன்
மார்க்கெட் (Prediction Market). இது அமெரிக்க டாலருக்கு பதிலாக USDC
எனும் ஸ்டேபிள் காயினைப் பயன்படுத்தி பிளாக்செயின்
தொழில்நுட்பத்தின் வாயிலாக கிரிப்டோகரன்சி வாயிலாக இயங்குகிறது.
இத்தளத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வெற்றியாளர் யார் என்ற
கேள்விக்கு பந்தையும் வைக்கப்பட்டு வர்த்தகம் நடந்து வருகிறது. இந்த
கேள்விக்கான பெட்டிங் ஆப்ஷன் பட்டியலில் திமுக, அதிமுக, தவெக,
தேமுதிக, காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்
பட்டியலிடப்பட்டு உள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி துவங்கிய இந்த பெட்டிங்
ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது தேர்தல் நடக்கும் நாள் வரையில் பெட்டிங்
நடக்கும். இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 1,52,420 டாலர் மதிப்பிலான
தொகைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது. பங்குகள் எப்படி வாங்கி
விற்கப்படுகிறதோ, அதேபோல் தான் பாலிமார்கெட் தளத்திலும் வர்த்தகம்
நடக்கிறது
இதில் உண்மையாகவே பணம் வைத்து பெட்டிங் செய்யப்படும்
காரணத்தால் மிகவும் மக்களின் உண்மையான எண்ணத்தைப் பிரதிபலிக்கும்
விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய பெட்டிங் நிலவரத்தின் படி DMK – சுமார் 80% வெற்றி
வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. ADMK (AIADMK) – சுமார் 14% TVK (விஜய்
கட்சி) – சுமார் 6% INC – 1% க்கும் குறைவாக BJP – INC – 1% க்கும்
குறைவாக வெற்றி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தற்போது சந்தை
பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் DMK தான் அதிக இடங்களை வெல்லும்
என நம்புகின்றனர். மேலும் இது தேர்தல் கமிஷன் அல்லது அதிகாரப்பூர்வ
சர்வே அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Polymarket என்பது முழுக்க முழுக்க ஊக அடிப்படையில் நடக்கும் ஒரு
வர்த்தகம். இதில் முக்கியமாக Kii0nX என்ற நபர் திமுக மற்றும் தவெக
வெற்றி பெறும் என இரண்டு கட்சியின் மீதும் பெட்டிங் செய்துள்ளார்.
இதேபோல் திமுக வெற்றி பெறும் என சுமார் 3831 பங்குகளை வாங்கி
குவித்துள்ளார். திமுக கட்சி மீது சுமார் 1,664.74 டாலர் பெட்டிங் செய்த
இவருக்கு திமுக வெற்றி பெறும் பட்சத்தில் 3,045.71 டாலர் கிடைக்கும்.
இதேபோல் தவெக கட்சி-யின் மீது இவர் பெட்டிங் செய்துள்ள 15.66
டாலருக்கு தவெகா வெற்றிப்பெற்றால் 84.64 டாலர் கிடைக்கும். சுமார்
22.71 சதவீத லாபம். இதுவே திமுக வெற்றி பெற்றால் 120.55 சதவீதம்
லாபம் கிடைக்கும்.
Decent-Abacus-Advocate என்ற நபர் தவெக கட்சி வெற்றி பெறும் என
5445 பங்குகளை வாங்கியுள்ளார். ஆனால் தற்போதைய நிலவரத்தின் படி
தவெக 6 சதவீத வெற்றி வாய்ப்புகளை மட்டுநே பெற்றுள்ளதால் இவரின்
முதலீடு 81 சதவீத இழப்பில் உள்ளது. 1351.26 டாலர் முதலீடு செய்து
307.62 டாலர் பெற உள்ளார். இது மக்கள் தங்களது பணத்தை பெட்டிங்
செய்து யார் வெல்வார்கள் என்று தேர்வு செய்கிறார்கள், அதன்படி
உருவாகும் probability தான் இந்த சதவீதம். இது crowd sentiment + money-
backed opinion ஆகும்.
2026 TN ASSEMBLY ELECTIONதமிழ் நாடு
மார்ச் 28ந்தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி!

More Stories
தி.மு.க. கூட்டணியில் ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப் படை கட்சிகளுக்குதொகுதிகள் ஒதுக்கீடு MAR 26, 2026 சென்னை:
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்.. குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ்
கோவிலுக்கு நேந்தி வைத்தது போல தொடரும் பலி.. – விஜய் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்த எஸ்.வி.சேகர் !