டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “எங்களது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளது.
உலகின் 20% எரிசக்தி விநியோகம் நடைபெறும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்து, மிகக் குறைந்த அளவிலான கப்பல்களே இந்தப் பாதையைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் வழியாகச் செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி? – வெளியான ஆவணத்தால் வெடித்தது சர்ச்சை
300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகள்
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா